Friday, October 23, 2009

லினக்ஸ்க்கு ஒரு வாய்ப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு.,

கணிணி பயன்படுத்தகூடிய நாம் அனைவரும் பல மென்பொருட்களை பயன்படுத்துகிறோம்.
ஆனால் அவை பெரும்பாலும் உரிமம் பெற்றமென்பொருட்களாக இருப்பதில்லை....

நாம் பயன்படுத்தும் அனைத்து மென்பொருட்களுக்கும் நம்மால் உரிமம் பெறமுடிவதில்லை..

இதற்கு என்ன தீர்வு ?

லினக்ஸ் பயன்படுத்தலாம் என சொல்லவில்லை எனெனில் நம்மில் பெரும்பாலருக்கு லினக்ஸ்
ஒரு புதிராகவே இருக்கிறது. (எனக்கும் தான் )

ஆனால் windows ல் பயன்படக்கூடிய பல இலவச மென்பொருட்கள் /அகம் திறந்த மென்பொருட்கள் உள்ளன அவற்றை பயன்படுத்த முயற்சி செய்யலாம்...


முழுமையாக Operating System மை மாற்றினால் அது நமக்கு சிரமத்தை கொடுக்கும் நாம் Windows ல் செய்த அனத்து வேலைகளையும் நம்மால் உடனடியாக லினக்ஸ் ல் செய்ய முடியாது. அனால் நாம் பன்படுத்தும் Application Software யை மாற்றி முயற்சிக்கலாம்.

எ.கா Winrar மற்றும் WinZip க்கு பதில் 7Zip போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இலவச மென்பொருகட்களை பயன்படுத்துவதால் நாம் அவற்றை இலவசமாக Up Date
செய்துகொள்ள முடிகிறது . Crack,Keygen,Serial Key என Google யை தூர்வார தேவையிலை.

வீட்டு கணிணிகளில் Windows உடன் Linux யை யும் இணைத்து பயன் படுத்தலாம். இவ்வாறு Linux க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதினால் Linux ன் அருமை நமக்கி தெரியவரும்.

Linux யை பற்றி சொல்லி தர பலபேர் உள்ளனர் (தமிழிழும்)

அவர்களில் சிலர்

http://ubuntuintamil.blogspot.com/
http://kumarlinux.blogspot.com/
http://ubuntu-tam.org
http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/